திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 17ஆம் தேதி காலை 9 45 மணி முதல் 18ஆம் தேதி காலை 10:25 மணி வரை தரிசனம் செய்யலாமென கோயிலின் இணை ஆணையர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். இக் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். அமாவாசை, பௌர்ணமி, வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த மாத அமாவாசை 17ஆம் தேதி நாளை காலை 9.45 மணிக்கு தொடங்கி 18 ஆம் தேதி காலை 10:25 மணிக்கு முடிய உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் நாளை முதல் மறுநாள் காலை 10:25 வரை அம்மாவாசை தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.
