திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து மணல் ஏற்றி சென்ற வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பொன்னி டெல்டா அடுக்குமாடி குடியிருப்பு அருகில் காவேரி ஆற்றில் இருசக்கர வாகனத்தில் மணலை எடுத்துச் கொண்டு சென்ற திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.பிறகு கருப்பையாவை ஜாமினில் விடுதலை செய்தனர்.

