தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று நடந்தது. திமுக சார்பில் கவுசல்யாவும், அதிமுக சார்பில் அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளருக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மொத்தம் உள்ள 30 உறுப்பினர்களில் முன்னாள் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, உறுப்பினர் விஜயகுமார் ஆகிய 2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி
- by Authour
