Skip to content

ராணுவ அதிகாரி வேடத்தில் சசிகுமார்.. டைரக்டர் யார் தெரியுமா..?…

நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் பேமிலி .இந்த படம் வெற்றி பெற்ற பின்னர் சசிகுமார் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் .அடுத்து இவர் நடிக்கும் படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  ஜே.கே பிலிம் இண்டர்நேஷனலுக்காக ஜே.கமலக்கண்ணன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ‘யாத்திசை’ தரணி ராசேந்திரன் இயக்கும் இதில், இந்திய ராணுவ அதிகாரி வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியிடப்பட்டது. தரணி ராசேந்திரன் கூறுகையில், ‘இதில் சசிகுமார் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளித்துள்ளது. பிரிட்டீஷ் சகாப்தத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இதில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் அவருக்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. இந்த கேரக்டருக்கு அவரை தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு தனது நடிப்பால் கேரக்டரை சசிகுமார் மெருகேற்றியுள்ளார். முக்கிய வேடங்களில் சேயோன், பவானிஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் நடிக்கின்றனர். இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.

error: Content is protected !!