மேகாலயா, கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். உ.பி.யை சேர்ந்தவர். இவர் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது தான் அந்த மாநிலத்தின் சிறப்பு அதிகாரங்களை மத்திய அரச ரத்து செய்தது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த சத்யபால் மாலிக் புதுடெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு இன்று அவர் காலமானார். சத்யபால் மாலிக் பாஜக தேசிய துணைத்தலைவராகவும் இருந்தார். கவர்னர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் புல்வாமா தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு மீது பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் ஐடி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்
- by Authour
