Skip to content

புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 09.05.2025 அன்று காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் ஆய்விற்கு வரும் பொழுது ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும். தீயணைப்பான் கருவி புதுப்பிக்கப்பட்டு நடப்பில் இருக்க வேண்டும். முதலுதவிப்பெட்டியில் மருந்துகள் நடப்பில் இருக்குமாறு கொண்டு வரவேண்டும். வேகக்கட்டுப்பாடு கருவி/ GPS உபகரணம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!