Skip to content

குளித்தலை…பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாட்ச்மேன் போக்சோவில் கைது..

கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் தெருவில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் யோகா வகுப்புகள் நடைபெறும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் முதல் யோகா வகுப்பு நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று யோகா ஆசிரியர் வர இயலாததால் வகுப்பு இல்லை என மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆறாம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமிக்கு செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி இன்று யோகா வகுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி வாட்ச்மேனான குளித்தலை கொல்லம் பட்டறை சேர்ந்த பாலசுப்ரமணியன் (55) என்பவர் பள்ளியில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார். பள்ளி கேட்டின் வழியாக வெளியே வந்த சிறுமி எதிரே உள்ள வீட்டில் அமர்ந்து கொண்டு அங்கிருந்தவர்கள் உதவியுடன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து பெற்றோரிடம் சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வாட்ச்மேன் பாலசுப்பிரமணியன் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் சிறுமியின் உறவினர்கள் பள்ளிக்கு வருவதை பார்த்து வாட்சுமேன் தப்பி சென்ற போது தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்ற பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

பள்ளி சிறுமியிடம் அதே பள்ளியை சேர்ந்த வாட்ச்மேன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!