பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..செல்போன் பறிப்பு -வாலிபர் கைது .
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 24 மணி நேரமும் போலீசார் கஞ்சா, போதை பொருள் விற்பனைகளில் ஈடுபடுவோரை கண்காணித்து சட்டபூர்வ நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராபட்டி இருப்புப் பாதையில் வாலிபர்கள் 3 பேர் அமர்ந்து வழிப்போக்கர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அந்தபகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் பிரவீன்குமார் (வயது 15) என்பவரிடம் கத்தி, பிளேடை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து மாணவனின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தந்தை முத்துக்குமார் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த 3 பேரில் ஒருவரான சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 19) என்ற வாலிபர் மட்டும் சிக்கிய நிலையில் மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி மேலகல்கண்டா கோட்டை பகுதி சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராமபிரசாத் (வயது 22) இவர் மேலக்கலகண்டார் கோட்டை பகுதியில்கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமிலிபானு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம பிரசாத் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பாலக்கரை பெல் சி கிரவுண்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த யுவராஜ் (வயது 27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
தனியார் விடுதியில் குளியல் அறையில் சடலமாக கிடந்த ஊழியர்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஹைதராபாத் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த சுப்பிரமணியன் என்பவர் தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் குளியல் அறையில் பிணமாக கிடந்தார்.நீண்ட நேரம் ஆகியும்அரை திறக்கப்படவில்லை இதையடுத்து
மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாழ்பாள் போடப்பட்டிருந்தார் விடுதி அறையை திறந்து போலீசார் பார்த்தனர். அப்பொழுது அங்கு சுப்பிரமணியன் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்ரமணியன் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து சுமை தூக்கும் தொழிலாளி சாவு
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பிச்சை நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 50) சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் ரஞ்சித் குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம் கடந்த 5 ந்தேதி ரஞ்சித் குமார் குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட காரணத்தால் ரஞ்சித்குமார் விஷ மருந்து குடித்து உள்ளார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் வாந்தி எடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 12-ம் தேதி ரஞ்சித் குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.