கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து

அவர்களை கௌரவிக்கும் வகையிலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக படும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டி இந்த பாத பூஜையானது நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெற்றோர்களை நாற்காலியில்

அமரவைத்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் பாதம் தொட்டு தண்ணீரால் கழுவி பொட்டு வைத்து பூ இட்டு பூஜை செய்து ஆசி பெற்றது அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பள்ளி நிர்வாக தாளாளர் கூறுகையில் திருமணம் ஆன தம்பதிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெறுவது போல எங்கள் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் பாதங்களை தொட்டு பூஜை செய்வதன் மூலம் எல்லா வளமும் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு தங்களை கற்பிக்கும் ஆசிரியர்களையும் தொழுது தங்களின் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எழுத்தவே இந்த ஏற்பாட்டை ஆண்டு தோறும் செய்துவருவதாக தெரிவித்தார்.

