கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே வடமட்டம் கிராமத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50)என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளி வேலை நேரம் முடிந்ததும் பள்ளியின் வேனை தனது வீட்டின் அருகே பெருமாள் நிறுத்தி வைத்திருப்பார். அப்போது அக்கம் பக்கத்து குழந்தைகள் அந்த வேனில் ஏறி விளையாடுவது வழக்கம், கடந்த 6ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி வேனில் விளையாடி உள்ளார் . அப்போது வேன் டிரைவர் 4வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் திருநீலக்குடி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
திருநீலக்குடி காவல் நிலையத்தார் இந்த புகாரினை திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வேன் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வேன் ஓட்டுனர் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

