Skip to content

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட தொகைகளை இனிமேல் பணமாக பெறாமல், டிஜிட்டல் வழிகளில் மட்டுமே பெறுமாறு மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது, யு.பி.ஐ., மொபைல் வாலட், நெட்பேங்கிங் போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வழிகளின் மூலம் கட்டணத்தை வசூலிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே எளிதாக கட்டணத்தை செலுத்தும் வசதி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வும், அதற்கான பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை கல்விதுறையில் பண பரிவர்த்தனையை எளிதாக்கி, ஊழல் தடுப்பு மற்றும் நேர்மையான கணக்கீடு ஆகியவற்றை உறுதிசெய்யும் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

error: Content is protected !!