புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கல்வி விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் ஆகிய
தற்காப்பு கலை அடிப்படை பயிற்சிகளை மாவட்ட கலெக்டர் மு.அருணா இன்று (08.10.2025) துவக்கி வைத்தார். உடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.