செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தனர். இதனையடுத்து அடுத்து பாஸ்கரனை மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்தனர். மேலும் பாஸ்கரனை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
