Skip to content

செங்கோட்டையன் ஆதரவாளர்கள்- கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

  • by Authour

அதிமுகவில் உள்ள உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது 40 ஆதரவாளர்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (இ.பி.எஸ்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த அறிவிப்பு, செங்கோட்டையனின் 10 நாள் கெடு விதிப்புக்கு பதிலாக வந்த அதிரடியாக அமைந்துள்ளது. இது அதிமுகவின் ஒற்றுமை முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையன் வகித்த அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், அவரது ஆதரவாளர்கள் 40 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க கெடு விதித்ததற்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.K. கந்தவேல்முருகன் அவர்களும், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி B. அனுராதா அவர்களும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.R. செல்வம் அவர்களும், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.P. சிவசுப்பிரமணியம் அவர்களும்,

மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.A. மௌதீஸ்வரன் அவர்களும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கொத்துக்காடு திரு. V.P.பெரியசாமி அவர்களும், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி E. கௌசல்யாதேவி அவர்களும், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி V.P. தமிழ்செல்வி அவர்களும், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. P. ராயண்ணன் அவர்களும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. B.U. முத்துசாமி அவர்களும்,

செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K. பிரகாஷ் பாலாஜி அவர்களும், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. அந்தோணிசாமி அவர்களும், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. A. வேலுச்சாமி அவர்களும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. A.K. மெய்ராஜன் அவர்களும்

கோபிசெட்டிபாளையம் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் திரு. A.M. வேல்முருகன் அவர்களும்,
அந்தியூர் தொகுதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் திருமதி K.S. ரேவதி சண்முகவேல் அவர்களும்,
கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.பாண்டு ரங்கசாமி அவர்களும், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.N. வேலுமணி அவர்களும், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. C. முத்துக்குமார் அவர்களும்,

கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி பொறுப்பில் இருக்கும் திரு. K.E. இளங்கோ அவர்களும், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.S. ரமேஷ் அவர்களும், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. D. ஈஸ்வரமூர்த்தி அவர்களும், ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. C.M. கண்ணுசாமி அவர்களும்,
அந்தியூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. ராஜ்குமார் அவர்களும், ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. அறிவழகன் அவர்களும், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.M. சரவணன் அவர்களும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!