அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்தை, நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.
இன்றைய தினம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறியதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ள அனைவரும் இணைந்து, அதிமுக கூடுதல் வலிமை பெற வேண்டும் என்பதே தனது கருத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து பலரும் கருத்து தெரிவித்து வருவதால், இதுஇபிஎஸ்-க்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.