பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. விடுமுறையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றன. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோடைக் காலத்தில் ஏராளமான மக்கள் வெளியூர் பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மே மாதம் முதல் வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வருகின்றன.