உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி காலை 08.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக பந்த காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு சொந்தமான ஐந்து கிராம மக்கள் சார்பாக முக்கியஸ்தர்கள் பந்த கால்களை சுமந்து ஆலய வலம் வந்து பந்தக்கால் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள். சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் ஆலய நிர்வாக அதிகாரி சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

