சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு முன்னிலையில் வயலூர் சாலையில் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி திருச்சி – வயலூர் சாலையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டனர்.உரி ய தீர்வு எட்டப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு
- by Authour
