வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த எஸ்ஐகைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

