திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி பஸ் முனைய திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சியின் தலைமை தீரர் நேருவை பாராட்டுவது, என்னை நான் பாராட்டுவது போனறது. மத்திய மண்டலத்தை பலமாக வைத்திருக்கிறார். இந்த இயக்கத்தில் அவர் சந்தித்த இழப்புகள் ஏராளம். அது ஈடு செய்ய முடியாதவை .இயக்கத்துக்காக, எங்களுக்காக அவர் அதை எல்லாம் தாங்கி கொண்டு இருக்கிறார். இப்போதும் அதே தைரியத்தோடு உறுதியோடு செயல்படுகிறார். அவருக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை வழஙகினோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளார். எல்லா நகரங்களையும் வளர்த்து வருகிறார். அதற்கு எடுத்து காட்டு தான் இந்த பஞ்சப்பூர் பஸ் நிலையம். இது பஞ்சப்பூர் அல்ல, மிஞ்சப்பூர்.
பிரமாண்டமான பேருந்து நிலையமாக அமைத்து உள்ளனர். ஏசி ரூம், லிப்ட், எஸ்கலேட்டர் என விமான நிலையத்துக்கு இணையாக இந்த பஸ் நிலையத்தை அமைத்து இருக்கிறோம். மையப்பகுதியான திருச்சிக்கு இந்த பஸ் நிலையம் நிச்சயம் தேவை. திருச்சிக்கு என்றால் நேரு ஸ்பெஷலா பார்த்து பார்த்து செய்வார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என செய்து காட்டியவர். சில ஆண்டுகளுக்கு முன் நான் டில்லி சென்றபோது அங்குள்ள மாடல் ஸ்கூலில் விசிட் செய்தேன். அதேபோல, அதை விட சிறப்பா மாதிரி பள்ளிகள் தமிழ்நாட்டில் திறக்கணும் என முடிவு செய்தேன். அதை செயல்படுத்தி காட்டி உள்ளார் அமைச்சர் மகேஷ் . நேருவும், மகேசும் தங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றி எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து உள்ளனர். இந்த 2 அமைச்சர்களுக்கு துணையாக இருக்கும் செயலாளர்கள், அதிகாரிகள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இவ்வளவு சிறப்பா செய்த அரசின் செயலாளர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளை திறந்து வைத்து விட்டு தான் வந்தேன். இவர்களுக்கும் திருச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் 3 பேரின் சிலையும் கம்பீரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இது நமது கடமை மட்டுமல்ல, நமது நன்றி கடன்.
திருச்சி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை மூலம் 4, 52 ,174 பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. , உயர் கல்வி பயிலும் புதுமைப்பெண்கள் திட்டத்தில் 34 074 பேர் பயன் அடைகிறார்கள். , 86 ஆயிரம் பேர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26 ஆயிரத்து 66 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இங்கு ரூ.527 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
வேளாண் துறையிலும் ஆண்டுதோறும் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மக்களளைத்தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் அரச நாட்டுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுகிறது.எல்லாருக்கும் எல்லாமுமான ஆட்சியாக செயல்டுகிறது.
வேளாண் திட்டத்திற்காக விவசாயிகள் போராடியபோது, விவசாயிகளுக்கு எதிராக பேசியவர் எடப்பாடி. குடியுரிமை சட்டத்தை ஆதரித்து அதிமுக வாக்களித்ததால் தான் அது நிறைவேறியது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான் குளத்தில் பொதுமக்களை கொன்று குவித்தார்கள். காவிரி நீரை பெற சரியான வாதங்களை எடுத்து வைக்கல . அந்த ஆட்சியையும் இப்போதுள்ள திராவிட மாடல் ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். 4 ஆண்டில் சரிவில் இருந்து நாட்டை மீட்டோம். நம்பர் ஒன் மாநிலமாக மாற்றினோம். நாம் செல்லும் பாதை சிங்கப்பாதை. இனி ராக்கெட் வேகத்தில் செல்வோம். அடுத்து வரும் நாட்களில் அதை பார்ப்பீர்கள். நமது ஆட்சி. தொடரட்டும் .
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மேயர், அதிகாரிகள் பங்கேற்றனர்.

