Skip to content

கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

  • by Authour

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் வருகை தரும் ஆட்சியர் அலுவலக வளாகமே விழிப்புணர்வுக்கான தளமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த கோலத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பொதும

க்களும் வாக்காளர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ரங்கோலியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1950 என்ற ஹெல்ப் லைனில் தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பதிவு

படிவங்கள் குறித்து உதவி பெற உதவி மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை,வால்பா றை பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

error: Content is protected !!