கன மழையின் காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடிவாரத்தில் 70 மி.மீ., அணைகட்டு பகுதியில் 90 மி.மீ., மழை பொழிவு பதிவு. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 32.73 அடியே எட்டி உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவைவிட, 74.50 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவில் நிரம்பும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பு
