அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகள் சொர்ணலதா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது பெற்றோருடன் தண்டலை மேலத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது வயலுக்கு செல்லும்போது அதே ஊர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஞானசேகரன் என்பவர் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகவும், தான் முறை இல்லை எனவும், தங்கை முறை என பலமுறை கூறியதாகவும், அதனை ஏற்காமல் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை செய்து வந்ததாகவும், கடந்த 19-ம் தேதி ஞானசேகரன் மற்றும் அவரது அம்மாவும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, சொர்ணலதா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…
- by Authour
