சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. அஷிஷ் ராவத் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஸ் சிவகங்கை மாவட்டத்தை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
- by Authour
