கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரே மகன் வெங்கடேசன் (32) தந்தைக்கு உதவியாக இவரும் விவசாய வேலை பார்த்து வருகிறார்.
வெங்கடேசன் அடிக்கடி மது அருந்திவிட்டு பணம் கேட்டு தந்தையை அடிப்பது வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும், மகனுக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. அருகில் இருந்த நாற்காலியால் தந்தை செல்வத்தின் தலையில் அடித்ததாகவும் , இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வெங்கடேசன் தனது நண்பர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு தந்தை கீழே விழுந்துவிட்டார் தலையில் அடிபட்டுவிட்டது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி ஆட்டோவில் தந்தையை குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தலையில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வம் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தந்தையை பலமாக வெங்கடேசன் தாக்கியதாகவும் இதில் செல்வம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை மறைத்து தந்தை இறந்து விட்டதாகவும் தந்தையின் உடலை குளிப்பாட்டும் இவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.
இதனை தொடர்ந்து வெங்கடேசன் வீட்டிற்கு சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்தனர் . வெங்கடேசனிடம் நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், தந்தையை அடித்தது உறுதியானது.
மேலும் தலையில் காயமடைந்த தந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

