அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகேயுள்ள கவரப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் தேர் திருவிழா நடைபெருவது வழக்கம். இந்த வருட தேர்த்திருவிழாவா கடந்த 3 ம் தேதி அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை மாரியம்மனுக்கு சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், திரவிய பொடி பச்சரிசி மாவு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்ப்பட்டு மகா தீபாராதனை


காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தியுடன் அம்மனை வழிபட்டு பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தன. இவ்விழாவில் கவரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட திரளானவார்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். நாளை புதன்கிழமை இரவு சம்பூர்ண அரிச்சந்திரா நாடகம் தொடங்கி நாளை மறுநாள் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் நாடகம் நடைபெற்று திங்கள் கிழமை மதியம் சாகை ஊற்றுதல் அதனை தொடர்ந்து மாலை மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் வீதி உலா நடைபெற்று இரவு அம்மனுக்கு காப்பு அவிழ்த்தலுடன் திருவிழாவுடன் நிறைவுபெறுகிறது. இவ்விழா ஏற்பாட்டினை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

