Skip to content

ஸ்ரீரங்கம் பகல் பத்து 8ம் நாள்.. இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி நம்பெருமாள் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து 8ம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் இரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித்தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி;

கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி; சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் சாற்றி; காசு மாலை, 2 வட முத்து மாலை அணிந்து;

மாந்துளிர் வர்ண பட்டு அணிந்து; பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்க்ஷி ; புஜ கீர்த்தி; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து நம்பெருமாள் சேவை சாதித்தார். பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

error: Content is protected !!