திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் , மாநகர கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில், ஸ்ரீரங்கம்
கோட்டாட்சியர் செல்வராஜ். ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து, மாநகர காவல் துணை ஆணையர்கள் .அன்பு, ஸ்ரீதேவி, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திருமதி.கு.அனுசியா, மண்டலத் தலைவர் திருமதி.ஆண்டாள் ராம்குமார், உதவி ஆணையர் திரு.ரவி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்.