Skip to content

மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி…. கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(SSC) போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) மூலம் 10.000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு (MTS and Havaldar Examination) 18.1.2023 அன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 17.2.2023 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு 13 வட்டார மொழிகளிலும் (தமிழிலும்) நடைபெறவுள்ளது. இப்போட்டித் தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 7.2.2023 முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0438-2413510, 94990-55901 & g1990-559002 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!