திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
முகாம் நடைபெறுவதன் காரணமாக தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட துறைகள் கலந்துகொண்டு தமலேரிமுத்தூர்
ஊராட்சிக்கு உட்பட்ட மூக்கனூர்,மாக்கனூர், தாமலேரிமுத்தூர் உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றது. மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முகாம் நடைபெறுவதன் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகுபதியிடம் கேட்டபோது முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு விடுமுறை அளித்தேன் எனவும் தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.