பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு . பொள்ளாச்சி-ஜூலை- 16 தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமை ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் குற்றுவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இதில் ஆதிதிராவிடத் துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுகள் பெற்றனர் மகளிர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் காது கேளாததேர் மெஷின் இருசக்கர வாகனம் பல்வேறு தரப்பட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் மனுக்களாக அளித்தனர் புதிய மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்த வீட்டின் உரிமையாளர்களுக்கு இந்த முகாமில் உடனடியாக புதிய மின் இணைப்பு வழங்கும் உத்தரவை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா, திமுக நகர செயலாளர் டாக்டர் செந்தில்குமார் , பேரூராட்சி துணைத் தலைவர் ஜாபர் அலி முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்றனர் .
பொள்ளாச்சியில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
- by Authour
