உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது .அதன் ஒரு பகுதியாக மண்டலம் எண். 4, பீமநகர்பகுதி வார்டு எண் 51 மற்றும் 52 வது வார்டுகளுக்கு திருச்சி பீமநகர் பி .எஸ் . எஸ் திருமண மண்டபத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமை மேயர் மு. அன்பழகன் ஆணையர் மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்துபொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள்.
முகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43சேவைகளின்அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பதிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனு ககளையும் பெற்று அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எடுத்துரைத்தனர் .
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் துர்கா தேவி, ஆம் என்ற உறுப்பினர் கலைச்செல்வி
உதவி ஆணையர் சண்முகம் மற்றும் மேற்கு வட்டாட்சியர் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்