தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கருத்தடை செய்வது, காப்பகத்துக்கு நாய்களை மாற்றுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை
- by Authour
