Skip to content

கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கோவை இருகூர் – ஏ.ஜி.புதூர் சாலையில் தங்கம் மினி பஸ் தினமும் காலை 8 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பேருந்தில் தினமும் பயணிகள் அதிக நெரிசலுடன் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் மேற்கொண்ட வீடியோவை பின்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் அவரது செல்போனில் பதிவு செய்தார். அந்த காணொளியில், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவரில் ஒருவரின் கால் சாலையில் உரசியபடி சென்றது பதிவாகி உள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. பேருந்து பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து துறை மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!