அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பார்வையிட்டு, மாணவ, மாணவிகள் சாப்பிடும் மதிய உணவு சமையலறையில் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தும், பள்ளி வளாகத்தில்
கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணியினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.