Skip to content

அரசு பஸ் டிரைவர் செய்த காரியம் -அமைச்சர் தொகுதி பயணிகள் அதிருப்தி

திருச்சி மாவட்டம், கீழகல்கண்டார்கோட்டை வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் இன்று காலை 10.30 மணியளவில் கீழகல்கண்டார் கோட்டையிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடிய N86 அரசு பஸ் வரவில்லை. சுமார் 11.45 மணியளவில் அரசு பஸ் N41 வந்தது. சுமார் 2 மணி நேரம் அரசு பஸ் இல்லாததால் காத்திருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அந்த பஸ் கீழகல்காண்டார்கோட்டையிலிருந்து , மேலகல்கண்டார் கோட்டை மாஜி ராணுவ காலணி, அம்பிகாரம்,எஸ்ஐடி வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென அந்த பஸ்சில் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் எஸ்ஐடி நிறுத்தத்தில் அரசு பஸ்சை நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு விட்டு டிரைவர் பற்றாக்குறையின் காரணமாக நாங்கள் திருவெறும்பூர் செல்கிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார்கோட்டைக்கு தொடர்ந்து அரசு பஸ்கள் சரியான முறையில் இயக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!