திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ பற்றி எரியத்தொடங்கின. இந்த தீ விபத்தில் கரும்புகை வெளியேறியவுடன், வாடிக்கையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்
- by Authour
