அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ED விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

