Skip to content

சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்… சுப்ரீம் கோர்ட் உத்தரவு

  • by Authour

சாலைகளில் சுற்றித்திரியும் நாய், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தெரு நாய்கள் புகாமல் இருக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

தெரு நாய் தொல்லை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக பதிவுசெய்து விசாரித்து வருகிறது. கடந்தமுறை விசாரணையின்போது, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி.அஞ்சாரியா அமர்வு முன்பு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகினர்.

அப்போது நாய்க்கடி பிரச்சினையைத் தடுக்க மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தாக்கல் செய்த பதில் மனுக்களை ஆய்வு செய்த பின்னர், வழக்கில் கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்தான், தெரு நாய்கள் விவகாரத்தில் புதிய உத்தரவை உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!