Skip to content

உச்சநீதிமன்றம் தீர்ப்பு… கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

தமிழக ஆளுநருக்கு ஏதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு கரூர் மாவட்ட திமுகவினர் வரவேற்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் .

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது இந்த வழக்கு இன்று விசாரணை மேற்கொண்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.

அதன்படி அரசியல் சாசனப்படி ஆளுநர் மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது இதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக அரசு அனுப்பிய 10மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அரசியல் சாசனப் பிரிவு 142ன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!