ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந் தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற் றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி டெல்டா பகுதிகளில் என்ஜிC நிறுவ னம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறு களை அமைத்தது. இதனை எதிர்த்து திருவாரூர் மாவட்டம் கரிய மங்கலத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண் டியன் தலைமையில் கடந்த 2015-ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தின்போது, ஓஎன்ஜிசி நிறு வனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்ப டுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்ரபாண்டியம் போலீஸார் வழக்குப்ப திவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதி மன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வரா ஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இத் தீர்ப்பைத் தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து பி.ஆர்.பாண் டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை நிறுத்தி வைத்து, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதி பதிஎம்.சுந்தர்மோகன் முன் வெள்ளிக்கிழமை விசா ரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கு ரைஞர் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்குரைஞர் சிவ ராஜசேகரன் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, இருவருக் கும் பிணை வழங்கி உத்தரவிட்டனர்.

