சுற்றுலாவுக்கு “அதை” எடுத்து வர சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்

296
Spread the love
வெளிநாட்டு சுற்றுலாவிற்கு ஆணுறை எடுத்து வருமாறு 14 வயது மாணவிகளிடம் கூறிய இங்கிலாந்து  ஆசியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் மேற்கு சசெக்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சாட்ஸ்மோ கத்தோலிக்க உயர்நிலை பள்ளி. இப்பள்ளி மாணவிகளுக்கு இத்தாலி சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு பணிபுரியும் டேவ் குத்பெர்ட்சன் (53) என்கிற அறிவியல் ஆசிரியர், சுற்றுலாவிற்கு வருகை தரும் 14 வயது மாணவிகளிடம் ஆணுறை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்களுடைய வீட்டில் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது.

LEAVE A REPLY