புதுக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தநாதசுவாமி சமேத ஸ்ரீ வேதநாயகி அம்பாள் ஆலயத்தில் இன்று மஹா அஷ்டமி (சுவாமி படியளக்கும் திருநாள்) கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சப்பரத்தில் அமர்ந்துவீதி உலா புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குராஜவீதி, மேலராஜவீதி, வடக்குராஜவீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
நகர்முழுவதும் உள்ள தாய்மார்களும், வியாபாரிகளும்வீதி உலா வந்த சுவாமிகளுக்குஅரிசி வழங்கி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.