தமிழகத்தில் உணவு பொருட்களை டெலிவரி செய்ய ஜொமோட்டோ, சுவிக்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளது. இந்த ஊழியர்கள் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற ஜிஐஜி நிறுவனங்கள் அதன் டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வை அறிவித்துள்ளன.
இன்று மாலை 6 – நள்ளிரவு 12 மணி வரையான பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.150 வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என்றும் 6 மணி நேரத்தில் ரூ. 3,000 வரை சம்பாதிக்கலாம் எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

