Skip to content

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Authour

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட… Read More »திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

  • by Authour

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மகா தீபம் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா… Read More »திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

  • by Authour

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட… Read More »திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

  • by Authour

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை… Read More »திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சதிஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து… Read More »லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

  • by Authour

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக… Read More »டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர்,  திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக… Read More »திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோவிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர்.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோவிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீசார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீசார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 காவலர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பதிவிட்டிருந்தார்.Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

  • by Authour

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு திருவண்ணாமலையில்  மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இன்று பவுர்ணமி என்பதால்   கிரிவல… Read More »திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

error: Content is protected !!