Skip to content

திருச்சியில் ”தக் ஃலைப்” படம் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

36 வருடங்களுக்கு பின்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிலம்பரசன், நடிகைகள் திரிஷா, அபிராமி , ஜஸ்வர்யா லெட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா மாநிலம் தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று தக் ஃலைப் படம் இன்று வெளியாகி உள்ளது. தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி சோனா மீனா திரையரங்கில் வெளியாகி உள்ள திரைப்படத்தை கமல் ரசிகர்கள் மற்றும் திருச்சி கிழக்கு, மேற்கு மாவட்ட மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் திரைப்பட வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர் .மேலும் இது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் கூறுகையில்… இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் எனவும் கமலஹாசன் தன்னுடைய இளைய நடிகருக்கு மிகப்பெரும் வாய்ப்பு வழங்கியுள்ளார் எனவும் கமல் மேடையில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிடப்படும் என்ற நிலையில் அன்பு எப்பொழுதும் மன்னிப்பு கேட்காது என கமல் கூறி உள்ளார் அவர் கூறியது மிகவும் சரியானது இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றி அடையும் என தெரிவித்தனர்.
error: Content is protected !!