பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனுக்கு(91) தகைசால் தமிழர் விருதினை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விருதினை, சென்னையில் ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார். விருதுடன் ரொக்ப்பரிசும் வழங்கப்படும். குமரி அனந்தன் எம்.எல்.ஏவாக, எம்.பியாக , கட்சித்தலைவராக பணியாற்றி உள்ளார். சிறந்த தமிழ் பேச்சாளர். இலக்கிய செல்வர் என்ற பட்டமும் இவருக்கு உண்டு. பலநூல்கள் எழுதி உள்ளார். தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் உழைத்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
குமரி அனந்தனின் மகள் தான் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

