Skip to content

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் மதிப்பு கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மூலிகைகள், பழங்கள், காய்கறி விதைகள் போன்றவை அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விழாவை தொடங்கி வைத்த பின் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” மத்திய அரசு இந்திய அளவில் 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் அளவை குறைக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் அளவை குறைக்க திட்டமிட்டு உள்ளது.

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, விவசாயிகளுக்கு நல்ல முன்னெடுப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்தப்பட்டதற்கு பலரும் பாராட்டுகின்றனர்.

இந்தியாவிலேயே பயறு உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடம். வேளாண் விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த கண்காட்சி நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது, விவசாயிகளுக்கு புதிய சாகுபடி குறித்து தெரிந்து கொள்ள முக்கிய வாய்ப்பாக கண்காட்சி உள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் விவசாயிகளுக்கு உருவாகும்.

47,000 ஏக்கர் தரிசு நிலங்கள் மீண்டும் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆக்கப்பூர்வமாக செயல்படுவதால் 446 மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தியை எட்டியுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.

error: Content is protected !!