Skip to content

திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்…

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் சீனிவாசன், ஞானஜோதி , கனிமொழி, மகேந்திரன், முருகேசன், மோகன்,காமாட்சி, கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உண்ணாவிரதத்தில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். உண்ணாவிரதத்தில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், அகவிலைப்படி போனஸ் 5 சதவீதம் தனி ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளீட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணவிரத போராட்டம் நடத்தினார்கள்.
error: Content is protected !!