தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரிகாலன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் முருகானந்தம், ரமணி, அன்பழகன், மாவட்ட இணை செயலாளர்கள் பிரித்திவிராஜன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சிவகுருநாதன், மாவட்ட இணை செயலாளர் தமிழரசன், வட்டத் தலைவர்கள் பிரகாஷ் (தஞ்சாவூா்), தனவேல் (திருவையாறு) , ரமேஷ் (திருவிடைமருதூர் ), ரமேஷ் (பாபநாசம் ), முருகானந்தம் (பூதலூர் ), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு ) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த போராட்டத்தில் டிஎன்சிஎஸ்சி-யில் கிடங்கில் உள்ள எடைத்தராசும், நியாய விலை கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து அதன் அடிப்படையில் சரியான இடையில் அத்தியாவசிய பொருட்கள் இறக்கப்பட வேண்டும். விற்பனை முனையத்தையும் எடை தராசு இணைத்து அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அனைத்து நியாயவிலை கடைக்கு எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். அகில இந்திய ஆய்வு அறிக்கை படி நியாய விலை கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்பட வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
